சக மாணவர்களை் மீது துப்பாக்கி சூடு நடத்திய சிறுமி…

0

அமெரிக்காவில் Idaho மாநிலத்தில் நடுத்தர பள்ளி ஒன்றில் 12 வயது சிறுமி துப்பாக்கியால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியையை சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6ம் வகுப்பு படிக்கும் மாணவி 12 வயது தனது பையில் கை துப்பாக்கியை மறைத்து வைத்து பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார்.

திடீரென பையிலிருந்து துப்பாக்கியை எடுத்த மாணவி சரமாரியாக சுட தொடங்கியுள்ளார்.

இதில் சக மாணவர்கள் இருவர் மற்றும் ஒரு ஆசிரியை என 3 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆசிரியை ஒருவர் சிறுமியிடமிருந்த துப்பாக்கியை பிடிங்கி தடுத்து மடக்கி பிடித்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் ஆசிரியர் பிடித்து வைத்திருந்து சிறுமியை கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.

சிறுமியின் நோக்கம் இதுவைர தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து எப்.பி.ஐ மற்றும் உள்ளூர் சட்ட அமுலாக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here