க.பொ.த சாதாரணதரப் எழுதும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடிய அபாயம்

0

இலங்கையில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ, மாணவியருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் தனியார் வகுப்புக்கள் குறித்த துண்டுப்பிரசுர விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்வதன் மூலம் கொரோனா நோய்த் தொற்று மாணவர்களுக்கு பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்வது தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பரீட்சை நிலையங்களுக்கு வெளியே துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர், பொலிஸாரிடம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்யும் நபர்களுடன் மாணவர்கள் தொடர்பு பேணக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here