கோவேக்சின் செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கும் பிரிட்டன் அனுமதி!

0

பிரிட்டன் அரசு கோவேக்சின் செலுத்திக்கொண்ட இந்தியர்களை கட்டுபாடுகள் இன்றி அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே மத்திய அரசு கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதி அளித்திருந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதனைத்தொடர்ந்து தற்போது பிரிட்டன் அரசு கோவேக்சின் செலுத்திக்கொண்ட இந்தியர்களை அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.

ஆம், 2 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பயண கட்டுபாடுகள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22 ஆம் தேதி முதல் 2 டோஸ் கோவேக்சின் செலுத்தியவர்கள் பிரிட்டன் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நடைமுறை சீனாவின் சினோவிக் தடுப்பூசிக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனாவுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்தது. கடந்த 11 ஆம் தேதி முதல் இரு தவணை கோவிஷீல்டு செலுத்திய இந்திய பயணிகள் தனிமைப்படுத்தப்படாமல் பிரிட்டன் அரசு அனுமதித்து வருவது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here