கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய யோகி பாபு

0

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. இவர் காமெடி வேடங்கள், கதையின் நாயகன் உள்ளிட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தற்போது அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்திலும், விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்திலும், மிர்ச்சி சிவா இயக்கத்தில் ஆர்.கண்ணன் இயக்கும் ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர். தனது சமூக வலைத்தள பக்கத்தில் முருக கடவுளின் புகைப்படத்தை தான் வைத்திருப்பார். தனது திருமணத்தையும் குலதெய்வ கோயிலில் மிகவும் எளிமையான முறையில் நடத்தி முடித்தார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகரம் பேடு எனும் கிராமத்தில் இருக்கும் தனது சொந்த இடத்தில் வராகி அம்மன் கோயிலை கட்டியுள்ளார். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் தற்போது விமரிசையாக நடைபெற்றுள்ளது. இதில் யோகிபாபு தமது குடும்பத்துடன் கலந்துகொண்டு தரிசனம் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here