கோவிட் தடுப்பூசி பெறுவதால் குழந்தையின்மை ஏற்படும் அபாயம்…?

0

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 4 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குழந்தையின்மை ஏற்படும் என போலியான பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதனால் இளம் வயதினர் தடுப்பூசி பெறுவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

அதிலும் முஸ்லிம் இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதனை நிகராகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட எண்ணிக்கை மிகவும் குறைவடைந்துள்ளது

பாலியல் மலட்டுத்தன்மை, குழந்தை பாக்கியமின்மை போன்ற போலி பிரச்சாரங்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here