கோழிக் குழம்பு வைக்காததால் மனைவியை கொன்ற கணவன்….

0

இந்தியாவில் கர்நாடக மாநிலம் ஹரிஹரா தாலுகா பன்னிகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான கெஞ்சப்பா.

ரோடு ரோலர் ஓட்டுனரான கெஞ்சப்பா முதல் மனைவி இருப்பதை மறைத்து, ஷீலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் கெஞ்சப்பாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உயிருடன் இருப்பதும், குழந்தை இல்லாத காரணத்தால் அதை மறைத்து தன்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டதும் ஷீலாவுக்கு தெரியவந்தது.

கணவனின் நடத்தையை கண்டு கொள்ளாமல் ஷீலா இருந்துள்ளார்.

இந்நிலையில் ஷீலாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கெஞ்சப்பா அடித்து உதைத்து வந்ததாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த கெஞ்சப்பா, மனைவியிடம் கோழிக்கறி குழம்பு வைத்து தரும்படி கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

வீடு திரும்பியபோது ஷீலா கோழிக்கறி குழம்பு வைக்காமல் இருந்ததாக கூறப்படுகின்றது.

அதனால் ஆத்திரம் அடைந்த கெஞ்சப்பா மீண்டும், ஷீலாவிடம் தகராறு செய்து அவரை அடித்து, உதைத்தார்.

ஷீலாவின் நடத்தையையும் விமர்சித்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

மேலும் ஆத்திரம் அடங்காத கெஞ்சப்பா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஷீலாவை சரமாரியாக குத்தினார்.

இதில் உடலில் 10 இடங்களில் கத்திக்குத்து விழுந்ததால் பலத்த காயம் அடைந்த ஷீலா சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ஷீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கெஞ்சப்பாவையும் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here