கோர விபத்து…! விமானம் மோதி இளம்பெண் பலி….

0


மாண்ட்ரீலுக்கு வடக்கே தரையிறங்கிய விமானம் மோதியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கியூபெக் மாகாண பொலிசார் இதனை தெரிவித்துள்ளனர்.

20 வயதுடைய பெண் செயின்ட் எஸ்பிரிட் அருகே ஓடுபாதைக்கு அருகில் ஒரு டிராக்டரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது தரையிறங்கிய விமானம் மோதி, குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர், குறித்த பெண்ணை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

பலத்த காயங்கள் காரணமாக, குறித்த பெண் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

விமானம் தரையிறக்கப்படும் போது, அதன் விமானி டிராக்டரில் பயணிக்கும் நபரை கவனிக்கவில்லை என கூறியுள்ளார்.

இந்த அதிர்ச்சியில், தற்போது விமானியும் மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here