கோர விபத்தில் சிக்கிய 6 வயது மகளை கண்டு கதறிய தந்தை..!

0

கிழக்கு தைவானின் ஹுவாலியென் பகுதியில் சில நாட்களுக்கு முன் பயங்கரமான ரயில் விபத்து இடம்பெற்றது.

அதில், அந்த ரயிலில் பயணம் செய்த 50 பேர் பலியாகிய நிலையில் 200 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகே கட்டுமான பணி ஒன்று நடைபெற்று வந்துள்ளது.

அங்கிருந்த லொரி ஒன்று பார்க் செய்த இடத்திலிருந்து நழுவி தண்டவாளத்தில் வந்து நின்றதால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அந்த வகையில், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த டாமோ லீ எனும் நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு தந்தையைப் பற்றிய உருக்கமான நிகழ்வு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில் யாங் என்ற நபர், தனது விடுமுறையை குடும்பத்துடன் கழிப்பதற்காக டைதுங் நகரத்திற்குச் டாரோகோ எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார்.

உடன் தனது இரண்டு மகள்களையும் அவர் அழைத்துக் கொண்டு சென்றார்.

யாங்கின் இளைய மகளின் பெயர் யாங் சி-சென் வயது 6.

திடீரென எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற ரயில் விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் சிக்கி கண் விழித்துப் பார்த்தபோது யாங்கை, மீட்புப் பணியாளர் ஒருவர் தன் பின்னால் சுமந்தபடி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது யாங் என் மகள்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என மீட்புப் பணியில் இருந்தவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

மீட்டப் பணி வீரரும் , கண்டிப்பாக உதவி செய்வதாகக் கூறி இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்த 6 வயது சிறுமியின் சடலம் ஒன்றை மீட்புப் பணியிலிருந்தவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இறந்துபோன தன் மகளைக் கட்டி தழுவி அழுத்தத் தந்தையைப் பார்த்துச் சுற்றி இருந்த அனைவரும் கண் கலங்கி நின்றதாக அந்த மீட்ப்பு பணியாளர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here