கோயிலில் செய்த தவறை திருத்தி பிராயச்சித்தம் தேடிய பொலிஸ் அதிகாரி!

0

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் காலணிகளுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி தனதுதவறை திருத்தும் முகமாக நேற்று தொண்டமானாறு ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார்.

இது தொடர்பில் ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் கோவில் தனது முகநூல் பக்கத்தில் “கடந்த சில நாட்களுக்கு முன்பு எம் பெருமாள் ஆலயத்தினுள் பாதணிகளுடன் வருகை தந்தபொலிஸ் உத்தியோகத்தர் தான் செய்த தவறினை திருத்தும்முகமாக நேற்று எம் பெருமாள் ஆலயத்துக்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

தவறுகள் செய்யாத மனிதன் இல்லை அந்தத் தவறுகளைத் திருத்தாதவன் மனிதனே இல்லை…” என்று பதிவிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கொட்டாச்சி என்பவர் காலணிகளுடன் வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி, வல்லிபுர ஆழ்வார் ஆலயங்களுக்குள் காலணிகளைக் கழற்றாது உள்ளே சென்றிருந்தார்.
இது தொடர்பில் இந்து மக்கள் கடும் அதிர்ச்சியும் எதிர்ப்பும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here