கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

0

யாழ்., கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமல்போயிருந்த நிலையில் இரண்டு நாள்களின் பின்னர் இன்று நவாலியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி தொடக்கம் அவரைக் காணவில்லை என்று குடும்பத்தினர் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கியிருந்தனர்.

இரண்டு நாள்களின் பின்னர் அவர் இன்று நவாலிப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மன விரத்திக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here