கோட்டை புகையிரத நிலைய மேம்பாலம் இடிந்து விழும் அபாயம்!

0

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னாலுள்ள மேம்பாலம் பழுதடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகத் தெரியவருகிறது.

இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் பாரிய அனர்த்தம் ஏற்படக் கூடும் எனவும் கொழும்பு மாநகர சபைக்கு பல தடவைகள் தெரியப்படுத்திய போதிலும் அதனைச் சீர்செய்யவோ அல்லது பராமரிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கொழும்பு மத்திய பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று(25) முதல் ரயில்கள் இயக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த மேம் பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பாலத்தின் மீது ஏராளமானோர் ஒரே நேரத்தில் நடந்து செல்வதால் பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்கவிடம் இது குறித்து வினவியபோது, ​​மாநகர சபையின் பொறியியலாளர்கள் இவ்வாறான அபாயகரமான நிலைமையை அறிந்திருக்கவில்லை எனவும் நிலைமையை விரைவில் கவனிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மேம்பாலம் உலக வங்கியின் திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டு திருத்தப்பட்டு கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here