கோட்டாபயவின் விடுதியைச் சூழ்ந்துகொண்ட தமிழர்கள்!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ நகரத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தங்கியிருந்த விடுதியை இன்று அதிகாலையிலேயே சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளாஸ்கோ நகரின் Dunblane , Hydro Perth Rd இலுள்ள Hilton Hotelஇல் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள பல உலகத் தலைவர்கள் தங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில், அங்கு தங்கியிருக்கும் கோட்டாபயவுக்கு எதிராக இன்று அதிகாலை முதல் கோஷங்களை எழுப்பி எமது எதிர்ப்புக்களைத் தொடர்ந்து தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

‘ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி’, ‘மனித உரிமைகளை மீறுபவர்’, ‘கொலையாளி’ என்று பல்வேறு கோசங்கள் அங்கு எழுப்பப்பட்டுக்கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு வடிவங்களில் மேற்கொண்டுவருகின்ற போராட்டங்கள் ஓயாத அலைகளாகத் தொடர்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here