கொவிட்-19 மீட்புச் சான்றிதழ் தொடர்பில் ஜேர்மனியின் முக்கிய கோரிக்கை….

0

ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் கீழ், கோவிட்-19 மீட்பு சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் 270 நாட்களிலிருந்து 180 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த 180 நாட்கள் (6 மாதங்கள்) எனும் செல்லுபடி காலத்தை பாதியாக குறைத்து 90 நாட்களாக (3 மாதங்கள்) ஐரோப்பிய ஒன்றியம் அறிவிக்கவேண்டும் என ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்குப் பிறகு, Omicron வகை கொரோனா வைரஸால் மீண்டும் தொற்று ஏற்பட கூடும்.

ஜேர்மனியில் எங்களால் மாற்ற முடிந்ததை நாங்கள் ஐரோப்பாவிலும் மாற்ற முயற்சிக்கிறோம்” என்று ஜேர்மன் சுகாதார அமைச்சர் Karl Lauterbach கூறியுள்ளார்.

இந்த மாறுபாடு COVID-19 வைரஸின் ஆதிக்க விகாரமாக மாறியுள்ளது.

இது 2020 முதல் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான ஜேர்மனியர்களை தாக்கியுள்ளது.

மேலும் குறிப்பாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி ஜேர்மனியில் கடந்த வாரம் 848,945 பாதிப்புகள் மற்றும் 1,045 இறப்புகள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here