கொவிட்-19 தொற்றை கண்டறியும் முகக்கவசம்… சீனா ஆராய்ச்சியாளர்கள்!

0

சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு முகக்கவசத்தை உருவாக்கியுள்ளனர்.

இது பயனர்கள் கொவிட் -19 அல்லது காய்ச்சலுக்குள்ளாகியுள்ளதா என்பதை அறிய உதவுகிறது.

ஷாங்காயில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆறு விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வின்படி,

முகக்கவசத்தில் கட்டப்பட்ட ஒரு சென்சார் காற்றில் உள்ள கொவிட் -19, H5N1 மற்றும் H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களை 10 நிமிடங்களுக்குள் கண்டறிந்து ஒரு சாதனத்திற்கு அறிவிப்புகளை அனுப்பும்.

கொவிட் -19 தொற்றுப் பரவல் ஒரு சில நாடுகளில் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, முகக்கவசம் கட்டாயம் என்ற நிலை தளர்த்தப்பட்டது.

சீனா உள்ளிட்ட நாடுகளில் முகக்கவச பயன்பாடு பரவலாக உள்ளது.

இது கடுமையான கொவிட்-பூச்ஜிய கொள்கையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பலர் அரசாங்க விதிகளைப் பொருட்படுத்தாமல் தங்களையும் மற்றவர்களையும் வைரஸிலிருந்து பாதுகாக்க அவற்றை அணிந்துகொள்கிறார்கள்.

செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் ஆக்சியோஸ்-இப்சோஸ் கணக்கெடுப்பில் 37 சதவீத அமெரிக்கர்கள் வீட்டிற்கு வெளியே முகக்கவசங்களை அணிவதைக் கண்டறிந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here