கொவிட் மருந்து வில்லைக்கு, முதல் தடவையாக அனுமதி

0

கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக உலகில் முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வில்லைகளுக்கு பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மருந்து வில்லையை அனுமதிக்கும் முதலாவது நாடு பிரித்தானியா என கூறப்படுகின்றது.

மெர்க் நிறுவனத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மால்னுபிரவிர் என்ற மருந்து வில்லைக்கே, பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தினாலேயே இந்த மருந்து வில்லை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுடன், உடல் பருமன், முதியோர், நீரிழிவு மற்றும் இருதய நோயாளர்கள் போன்ற கடுமையான நோய் தாக்கங்களை கொண்டவர்களுக்கு இந்த மருந்து வில்லையை வழங்க முடியும் என பிரித்தானிய ஒளடதங்கள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here