கொவிட் போனஸ் வழங்க ஜேர்மனி அரசு திட்டம்

0
Aktiviteter på Tubberödshus

ஜேர்மனியில் கொவிட் பரவலில் வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் முதியோர் இல்லங்களில் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

முதியோர் இல்லங்களில் முழு நேரம் பணி செய்யும் பணியாளர்களுக்கு இந்த ஆண்டின் 550 யூரோக்கள் வரை போனஸ் வழங்க இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனை சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbachம் உறுதி செய்துள்ளார்.

2020 நவம்பர் 1 ஆம் திகதியில் இருந்து 2022 ஜூன் 30 ஆம் திகதி இடையில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது வயதானவர்களை கவனித்துக் கொண்ட பணியாற்றியவர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும்.

அதிகபட்சமாக அவர்களுக்கு 550 யூரோக்கள் வரை போனஸாக வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நிர்வாகிகள், சமையல் அறை பணியாளர்கள், சுத்தம் செய்பவர்கள், ரிசப்ஷன், தோட்டவேலை, துணி துவைத்தல் மற்றும் செக்யூரிட்டி பணியாற்றியவர்கள், குறைந்தபட்சம் 25 சதவிகிதம் கொவிட் நோயாளிகளுக்காக பணி செய்திருந்தால் அவர்களுக்கு 370 யூரோக்கள் வழங்கப்படும்.

முதியோர் இல்லங்களில் பயிற்சி பெறுவோராக இருந்தவர்களுக்கு 330 யூரோக்கள்

மற்ற பணியாளர்களுக்கு 190 யூரோக்கள் வரையும், தன்னார்வலர் திட்டத்தின் கீழ் சேவை செய்தோருக்கு 60 யூரோக்கள் வரை வழங்கப்படும்.

முதியோர் இல்லங்களிலும் மருத்துவமனைகளிலும் பணியாற்றிய செவிலியர்களுக்கான போனஸாக, அரசு 1 பில்லியன் யூரோக்களை ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here