கொவிட் தொற்று தொடர்பில் அவசர எச்சரிக்கை

0

கொவிட் பெருந்தொற்று ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ளன

அண்மைய நாட்களில் கனடாவில் கொவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிகின்றது.

கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த மாதம் 15 ஆம் திகதி வரையில் கொவிட் காரணமாக நாளொன்றுக்கு சராசரியாக 4700 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

கனடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை சராசரியாக 2000 ஆக காணப்பட்டது.

கியூபெக் மாகாணத்தில் அதிக அளவில் கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றாரியோ மாகாணத்தில் வாராந்தம் கொவிட் தொற்றாளர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சளிக் காய்ச்சல் பருவ காலம் ஆரம்பமாகும் நிலையில் கொவிட் நோயாளர் எண்ணிக்கையும் உயர்வடையும் என சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே இதுவரை காலமும் கொவிட் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் இதனையும் கைவிட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here