கொழும்பை அச்சுறுத்தும் டெல்டா! அதிகரிக்கும் நோயாளிகள்

0

டெல்டா திரிபுடன் 11 பேர், கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா திரிபுடன் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் டெல்டா திரிபுடன் கூடிய 36பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெல்டா திரிபுடன் கொழும்பில் அடையாளம் காணப்பட்டவர்களில் 5பேர், கெத்தாராம விளையாட்டரங்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்கள் எனவும் 2 பேர் வட கொழும்பில் உள்ளவர்கள் எனவும் இரண்டு பேர் தெமடகொடையில் உள்ளவர்கள் என பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here