கொழும்பு வைத்தியசாலையில் இரு தாதிகளுக்கு ஏற்பட்ட நிலை

0

இலங்கையில் மஹரகம கண் வைத்தியசாலையில் தாதிகள் இருவரை அறை ஒன்றுக்குள் வைத்து ஊழியர்கள் பூட்டியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் ஒரு மணித்தியாலம் அறையினுள் வைத்து பூட்டி வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த தாதிகள் சிறைப்படுத்தப்பட்டதற்கான காரணம் இதுவரையில தெரியவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நேற்றைய தினம் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றைய ஊழியரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here