கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

0

கொழும்பின் பல பாகங்களில் 14 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (5) இரவு 8 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (6) காலை 10 மணிவரை நீர்வெட்டு அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 2,3 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியினுள் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகிக்கப்படும் என்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here