கொழும்பு புறநகரில் காரை சோதனையிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறை வாத்துவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரின் சாரதி ஆசனத்தில் இறந்த நிலையில் காணப்பட்ட நபரின் சடலத்தைத் தாம் இன்று காலை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here