கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் உயிரிழப்பு

0

மொறட்டுவை – கொழும்பு ரயில் மார்க்கத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி – நிவித்திகல பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குருநாகல் பொல்கஹவெல பகுதியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அலவ்வ – பொல்கஹவெல ரயில் மார்க்கத்தில் கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் ஆளடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை. சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here