கொழும்பு தொடர்பில் மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட மருத்துவ அதிகாரி

0

கொழும்பு நகரில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது கடந்த நான்கு நாட்களில் கொரோனாவால் எவரும் உயிரிழக்கவில்லை என கொழும்பு மாநாகர தலைமை மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொழும்பி;ல் ஐந்து நோயாளிகளே நாளாந்தம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக எவரும் உயிரிழக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் நாங்கள் 220 பிசிஆர் சோதனைகளையும் 300 துரித அன்டிஜென் சோதனைகளையும் முன்னெடுக்கின்றோம், இவற்றில் இரண்டு வீதத்திற்கும் குறைவானவர்களே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக அடையாளம் காணப்பட்டவர்கள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதால் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here