கொழும்பு துறைமுக நகரில் செல்பி எடுக்க கட்டணமா?

0

கொழும்பு துறைமுக நகரில் (Port city) தனிப்பட்ட செல்பிகள், அல்லது சாதாரண வீடியோக்கள், புகைப்படங்களுக்கு கட்டணம் அறவிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வைபவங்கள், திருமணங்கள், தயாரிப்பு அல்லது நவநாகரிக விளம்பரங்கள், இசை வீடியோக்கள், விளம்பரங்கள் அல்லது ஏனைய வகை வணிகப் படப்பிடிப்பு போன்றவற்றுக்கு படப்பிடிப்பு/ புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே கட்டணங்கள் விதிக்கப்படும்.

துறைமுக நகரத்தின் பகுதிகளான கடற்கரை , கோல்ப் மைதானம் , கடற்கரை பூங்கா மற்றும் பொழுதுபோக்கு, வாகனச் சவாரி ஆகியவற்றில் தொழிற்பாட்டாளர்களால் கட்டண அடிப்படையில் நிர்வகிக்கப்படும்.

இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம், கொழும்பு துறைமுக நகரின் பொதுப் பகுதிகளை நிர்வகிக்கும் Estate Management Company (EMC) மூலம் பொது இடங்கள், கழிவறைகள் மற்றும் குப்பை அகற்றுதல் ஆகியவற்றின் பராமரிப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here