கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் இரசாயனக் கப்பலில் தீ விபத்து

0

இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கப்பலொன்றில் தீ பரவியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

எம் வி எக்ஸ் பிரஸ் பேர்ல் (MV X-Press pearl) என்ற கப்பலில் தீப்பற்றியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு வந்த இரசாயன கப்பிலிலேயே தீப்பற்றியுள்ளது.

கடற்படையும் துறைமுக அதிகார சபையும் இணைந்து குறித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் தீயை அணைக்க இரண்டு கடற்படையின் உலங்கு வானூர்திகள் மற்றும் இரண்டு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here