கொழும்பு தாமரை கோபுரம் படைத்த சாதனை

0

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் 15 ஆம் திகதி நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

500 மற்றும் 2,000 ரூபாய் நுழைவுச் சீட்டை பெற்று, கோபுரத்தை பார்வையிடுவதற்காக சந்தர்ப்பம் உள்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் நேற்று கிடைத்த வருமானம் புதிய சாதனையை அடைந்துள்ளது.

திறக்கப்பட்ட முதல் நாளே பத்து லட்சம் ரூபாவை தாண்டி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரையிலும் தாமரை கோபுரத்தை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here