கொழும்பு சென்ற பேருந்து விபத்து – 13ஆக அதிகரித்த மரணங்கள் (Update)

0

பதுளை – பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதற்கமைய அந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததுடன் 31 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று காலை 7.15 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லுணுகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பசறை 13 ஆம் கட்டை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொதுப்போக்குவரத்து பேருந்து சேவையொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

முதலாம் இணைப்பு –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here