கொழும்பு சந்தைகளில் நடக்கும் பாரிய மோசடி! உயிர்கள் பறி போகும் அபாயம்

0

இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை, சுகாதார அமைச்சின், உணவு தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்படவுள்ளது. இரசாயன திரவியங்களைப் பயன்படுத்தி, மெனிங் சந்தையில் வாழைப்பழங்கள் பழுக்கவைக்கப்படுகின்றமை தொடர்பான தகவல் இதன்போது வெளியிடப்பட்டது.

இது குறித்து, சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை உள்ளிட்ட சில நிறுவனங்கள், நேற்றைய தினம் கூடி ஆராய்ந்தன.

இந்த விடயம், உணவு தொடர்பான சட்டத்தின் கீழ் உள்ளபோதிலும், குறித்த குற்றச் செயலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக இதுவரையில் தண்டனை விதிக்கப்படவில்லை என இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தினால், தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றும், நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டது. இதேநேரம், பொருளாதார மையங்களில் பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்ற முறைமை குறித்து அறிக்கை கோருவதற்கும், இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எதிர்காலத்தில் அரச நிறுவனங்களைத் தெளிவுபடுத்தி, பொதுமக்களுக்குரிய வழிகாட்டலை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சு கூறியுள்ளது.

இவ்வானான மோசமான செயற்பாடுகள் காரணமாக இரசாயன பொருள் கலந்த பழங்களை சாப்பிடும் மக்கள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here