கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மோதலால் பதற்றம்!

0

கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற அதிபர்−ஆசிரியர் ஆர்ப்பாட்ட பேரணியின் போது, கைது செய்யப்பட்ட 44 பேரையும் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவந்துள்ளது.

இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இருந்த குறித்த தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அதிபர்−ஆசிரியர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில், அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here