சமகால அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுமுறை நாளான இன்று பெருமளவு மக்கள் காலி முகத்திடலில் ஒன்றுகூடியுள்ளனர். இதன்போது அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இன்று நாள் முழுவதும் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.