கொழும்பு காலிமுகத்திடலில் 7ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்!

0

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை 7 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகையைக் காட்சிப்படுத்தியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பான நேற்றையதினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பு காலிமுகத்திடலுக்கு வருகை தந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ரபான் அடித்து மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு வெவ்வேறு விதங்களிலும் அரசாங்கத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here