கொழும்பு கடலில் ஜீப் விழுந்து விபத்து….

0

கொழும்பு துறைமுக முனையத்துக்கு அருகில் இலங்கை சுங்க திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதன் சாரதி காயமடைந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று 18 ஆம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துறைமுக முனையத்துக்கு அருகில் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளான குறித்த ஜீப் சுமார் 20 மீற்றர் ஆழத்தில் மூழ்கியுள்ளது.

இதனைடுத்து துறைமுக ஊழியர்கள், காவல்துறை மற்றும் கடற்படையினர் ஆகியோரின் முயற்சியின் ஊடாக பாரம் தூக்கியை பயன்படுத்தி ஜீப் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here