கொழும்பு கடற்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள முதலைகள்!

0

வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் காலி முகத்திடல் கடற்பகுதியில் முதலை ஒன்று அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அது தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான முதலை தற்போது அங்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாம் திகதி தெஹிவளை, தொடருந்து நிலையத்திற்கு அருகில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும், தெஹிவளை கடற்பகுதியில் பிரவேசித்த முதலை இன்னும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் பிடிக்கப்படவில்லை.

குறித்த முதலை 12 அடி நீளமுடையது என அவதானிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தையில் கண்டறியப்பட்ட முதலை 7 முதல் 8 அடி நீளம் கொண்டது என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காலி முகத்திடலில் நேற்றைய தினம் அவதானிக்கப்பட்ட முதலை சிறிய அளவுடையது எனவும், குறித்த முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here