கொழும்பு கடற்கரையை ஆட்டிப்படைக்கும் முதலைகள்.!!

0

வெள்ளவத்தை கடற்பகுதியில் நேற்று (19) பிற்பகல் முதலை ஒன்று சுற்றித் திரிந்தமை பதிவாகியுள்ளது.

முதலையால் அப்பகுதி மீனவர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றாடல் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை அவதானித்துவிட்டு திரும்பிச் சென்றதாக அப்பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலை அண்மித்த கடற்கரையில் முதலை ஒன்று காணப்பட்டது.

கடந்த 3ஆம் திகதி தெஹிவளை கடற்பரப்பில் நீர்மூழ்கி வீரர் ஒருவர் முதலை தாக்கி படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இரத்மலானை ரயில் நிலையத்தில் வசிக்கும் 58 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பின்னர் முதலையை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களால் முதலையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதேவேளைஇ வெள்ளவத்தை கடற்பகுதியில் இன்று முதலை ஒன்று காணப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here