கொழும்பு உணவகம் ஒன்றில் தீ விபத்து – ஒருவர் பலி

0

கொழும்பு வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதானை பொலிஸ் பிரிவில் இலக்கம் 248/30, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை கொழும்பு 10, என்ற விலாசத்தில் உள்ள உணவகத்தில் இன்று அதிகாலை இந்த தீவபத்து ஏற்பட்டுள்ளது.

ஏரிவாயு தாங்கியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர் 46 வயதுடைய பலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பு மாநகர சபையின் 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீவிபத்தில் உணவகத்தில் இருந்து வேறு ஒருவருக்கம் காயம் அல்லது பாதிப்பு ஏற்படவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here