கொழும்பில் வசிப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு!

0

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அதாவது கொழும்பு 1 – 15 வரையான பகுதிகளிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் நாளை (06) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் , கொழும்பு 1 – 15 க்கு இடைப்பட்ட பிரதேசங்களில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.

சுகததாச அரங்கு, ஜிந்துபிட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு (எம்.ஓ.எச்.), கம்பல் பார்க், சாலிகா மண்டபம் மற்றும் ரொக்சி கார்டன் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்த அனைத்து தடுப்பூசி நிலையங்களுக்கும் அருகில் உள்ளவர்கள் அதாவது வாகனங்களின் அன்றி நடந்து வரக்கூடிய தூரத்தில் உள்ளவர்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும். கொழும்பு 1 – 15 க்கு உட்பட்ட பிரதேசங்களில் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ வசிக்கும் எவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here