கொழும்பில் மூடப்படும் கடைகள்! வெளியானது காரணம்

0

எரிவாயு இன்றி பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிட்டுள்ளதாக கொழும்பு புறகோட்டை உணவு கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை காரணமாக கடைகளை மூட நேரிட்டுள்ளதாக உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புறக்கோட்டையில் உள்ள உணவு கடைகள், ஹோட்டல்கள் மற்றும் தேனீர் கடைகள் திடீரென மூடப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் திறக்கப்பட்ட கடைகள் தற்போது மீண்டும் மூடப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் கிரிஷான் மாரபே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணை வாங்குவதற்கு மக்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெய் வாங்கும் காணொளிகள் நேற்று வெளியாகி இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here