கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம கொள்கலன்

0

கொழும்பு துறைமுகத்தில் பலத்த இராணுவ பாதுகாப்புடன் ஜய கொள்கலன் முனையத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன் தொடர்பான உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜய கொள்கலன் முனையத்தில் பலத்த இராணுவ பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள கொள்கலன் குறித்து இலங்கை சுங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதன்படி, இந்த கொள்கலனில் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபையின் அனுமதியுடன் அகற்றப்படும் கதிரியக்க பொருட்கள் உள்ளன.

இந்த கதிரியக்க பொருட்கள் மீள் ஏற்றுமதி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை சுங்க பேச்சாளர், சுங்கப் பிரதி பணிப்பாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தகைய நடவடிக்கையின் போது காவல்துறை விசேட அதிரடிப்படையின் அல்லது அவ்வாறான விசேட பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வது அந்தச் செயற்பாட்டின் ஒரு அங்கம் என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, காணொளியில் பகிரப்படும் போலியான தகவல்களால் தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை கேட்டுக்கொள்கின்றன.

விசேட பாதுகாப்பு அணியினர் பாதுகாப்பு வழங்க, அந்த அணியின் மோட்டார் படையணி ​இருபுறங்களிலும் பயணிக்க, கடுமையான பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 0270586 என்ற இலக்கத்தை கொண்ட கொள்கலனே இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது. “இந்த கொள்கலனுக்கு ஏன்? இந்த பாதுகாப்பு” என சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டு கேள்வியெழுப்பப்பட்ட நிலையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here