கொழும்பில் பரபரப்பு -வாள்வெட்டில் ஒருவர் காயம் சிதறியோடிய மக்கள்!

0

கொழும்பு – செட்டியார் தெருவில் உள்ள தங்க ஆபரண கடையொன்றில் இன்றுக்காலை வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பையொன்றில் மறைத்து எடுத்து வந்த வாளை எடுத்தவர், கடைக்கு வெளியில் நின்றும், உள்ளே சென்றும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், ஒருவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்ட நபர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியவர், வாளை எடுத்துக்கொண்டு நடுவீதியில் நின்றவாறும் கூச்சலிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் நாலாபுறங்களும் பதறியடித்து சிதறியோடினர்.

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையே இந்த வாள்வெட்டுக்கான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here