மிரிஹான – பகிரிவத்த மாவத்தை பகுதியில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள இடத்திலேயே மக்கள் குவிந்துள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் எரிவாயு, மின்சாரமின்றி மக்கள் கடும் நெருக்க நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சிங்கள மக்கள், கோட்டாபயவின் வீட்டை முற்றுகையிட்டு நீதி கோரி வருகின்றனர்.
69 லட்சம் மக்களின் பெரும்பான்மை வாக்குகள் பெற்ற கோட்டாபயவுக்கு எதிராக சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கியமை ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.