கொழும்பில் நடுவீதியில் பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர்! வெளிவந்த தகவல்

0

பன்னிப்பிட்டியில் வீதியில் ஒருவரை சரமாரியாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார்.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த நிலையில் லொறி ஓட்டுநர் ஒருவரே இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து வீடியோவில் காணப்பட்ட போக்குவரத்து அதிகாரி மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here