கொழும்பில் தீ மிதிக்க சென்ற இளம் தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

0

கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தில் தீ மிதிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயார் தீக்காயங்களால் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்குருவிட்ட ஆராச்சிகே இரேஷா மதுரங்கனி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அவர் 10 வயதுடைய பிள்ளையின் தாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆமர் வீதியிலுள்ள குறித்த ஆலயத்தின் வருடாந்த தீக்குளிப்பு நிகழ்வு கடந்த 14ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் தீக்குளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போது கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

தீக்காயங்களுக்கு சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்த பெண், கவலைக்குரிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here