கொழும்பில் தீவிரமாக பரவ ஆரம்பிக்கும் டெல்டா வைரஸ்…

0

கொழும்பில் மேலும் மூன்று கொவிட் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை , கொழும்பு புறநகர் பகுதியான கஹத்துடுவ பகுதியில் டெல்டா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக அந்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.

குறித்த நபர் கொழும்பு − கொம்பனித்தெரு பகுதியிலுள்ள கட்டிட நிர்மாண பகுதியில் பணிப்புரிந்த ஒருவர் எனவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறான நிலையிலேயே, கொழும்பில் மற்றுமொரு கொவிட் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் ,இலங்கையில் முதல் தடவையாக தெமட்டகொட பகுதியில் சமூகத்திற்குள் இருந்து 5 கொவிட் டெல்டா தொற்றாளர்கள் அண்மையில் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here