கொழும்பில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தேடும் பொலிஸார்!

0

கொவிட் தடுப்பூசியின் ஒரு டோஸை கூட இதுவரையில் செலுத்திக் கொள்ளாத கொழும்பு நகரத்தில் உள்ளவர்களை தேடி விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

30 வயதிற்கு மேற்பட்டவர்களே இவ்வாறு தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்று (07) முதல் சுகததாஸ விளையாட்டரங்கிற்கு குறித்த நபர்களை அழைத்து வந்து தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here