கொழும்பில் சிறப்பு அதிரடி படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி…

0

இலங்கையின் கொழும்பின் புறநகர் பகுதியில் நபர் ஒருவருக்கும் சிறப்பு அதிரடி படையினருக்கும் இடையில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவமானது மொரட்டுவ, மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் இடம்பெற்றது.

மோதலில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் பாதாள உலகக்குழு உறுப்பினர் எனவும், 26 வயதான ‘அப்bபா’ (Abba) என்றழைக்கப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டுபாயில் உள்ள ‘பாணந்துற சாலிந்த’ என்ற நபருடன் நெருக்கமுடையவர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here