இரண்டு வருடங்களின் பின்னர் அமைக்கப்பட்ட வெசாக் பந்தல் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
கொழும்பு புறக்கோட்டையில் அமைக்கப்பட்ட வெசாக் பந்தல் ஒன்று இன்று சரிந்து வீழ்ந்துள்ளது
ஏற்கவே பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நாடு இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான சம்பவம் அபசகுனமாக உள்ளதென சிங்களவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வெசாக் பந்தல்கள் அமைக்கப்படவில்லை.
எனினும் இவ்வருடம் அமைக்கப்பட்ட பெரிய வெசாக் பந்தல் ஒன்று உடைந்து விழுந்திருப்பது நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதனை வெளிப்படுத்துவதாக சிங்கள மக்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.