பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் கையெழுத்து போராட்டமொன்று நடத்தப்பட இருக்கின்றது.
கொழும்பு- புறக்கோட்டையில் குறித்த போராட்டம் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட இருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளதாவது, “பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குதவற்கான கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போராட்டம் வடக்கில் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதோடு, கிழக்கு மாகாணத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொழும்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, காலை முதல் கையெழுத்து போராட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே அனைவரும் எதிர்காலத்தின் நன்மை கருதி பங்குக்கொள்வது அவசியமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.