கொழும்பில் இளம் தாதியின் திடீர் மரணத்தால் ஏற்பட்டுள்ள குழப்பம்…!

0

இலங்கையில் அம்பன்பொல, பெலுனகல பகுதியை சேர்ந்த 28 வயதுடைய திருமணமான தாதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலை அறையில் மர்மமான முறையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த தாதி வைத்தியசாலையின் 40வது மாடியில் பணிக்கு சென்றுள்ளார்.

அங்கு அறை ஒன்றில் கீழே விழுந்த நிலையில் ஊழியர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் போது அவர் உயிரிழந்துள்ளார்.

தடுப்பூசியை அவர் செலுத்தி கொண்டமையினால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவருடன் காணப்பட்ட இரகசிய உறவு வெளியே தெரியவந்தமையே இதற்கு காரணமாகும் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த தாதிக்கு, வைத்தியர் அனுப்பிய வஸ்ட்அப் குறுந்தகவல்கள் சிலவற்றை தாதியின் கணவர் பார்த்தால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் கணவர் விவாகரத்து கடிதத்தில் கையொப்பம் பெற்றுக் கொண்டு தாதியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.

நேற்று முன்தினம் அவர் பணிக்கு வந்த நிலையில் நண்பியிடம் வெளியே சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.

அங்கு அவர் தடுப்பூசி ஒன்றை செலுத்திக் கொண்டுள்ளார் என சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்த தாதியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here