கொழும்பில் இராணுவத்தினர் எடுத்துள்ள நடவடிக்கை!

0

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்க அவர்கள் வருகை தந்துள்ள வாகனங்களுக்கு அருகில் சென்று வழங்குவதற்கான ஏற்பாடு கொழும்பு தியத்த உயன வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அஸ்ட்ரா செனெகா முதல் டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கான 2ஆம் டோஸ் கொழும்பு தியத்த உயன வளாகத்தில் இன்று செலுத்தப்படுகிறது.

இலங்கை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி நிலையம் எதிர்வரும் நாட்களில் 24 மணி நேரமும் தொடர்ந்து செயற்படும்.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்க இங்கு விசேட வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஊனமுற்றவர்களை கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடத்துக்குக் கொண்டு செல்லாமல் அவர்கள் இருக்கும் வாகனத்தின் அருகில் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் இங்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here