கொழும்பின் பல பகுதிகளில் 28 மணித்தியால நீர் வெட்டு

0

கொழும்பின் பல பிரதேசங்களில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளைமறுதினம் 13ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08, கோட்டை மற்றும் கடுவலை மாநகர சபை அதிகாரப்பிரிவு, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபை அதிகாரப்பிரிவு ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலையில் இருந்து கோட்டை நீர் தடாகத்திற்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here